Sunday, 4 August 2013

நஸ்ரியாவுக்கு குவியும் வாய்ப்புகள்!!!!


தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா தற்போது ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா படத்திலும், டைரக்டர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ டைரக்சனில் ராஜா ராணி படத்திலும், தனுஷ்க்கு ஜோடியாக நய்யாண்டி என அடுத்தடுத்து படங்களில் நடித்து விட்டார். சிம்பு, ஹன்சிகா காதல் விவகாரத்திற்கு பின்னர் எங்கே தனது வாய்ப்புகள் பறிபோய் விடுமே என பயந்த ஹன்சிகா, ஐந்து வருடத்திற்கு பின்னரே திருமணம் என சொல்லி வருகிறார்.

ஆனால், ஹன்சிகாவின் காதல் விவகாரத்தால் அவருடைய வாய்ப்பு நஸ்ரியாவிற்கு போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நஸ்ரியாவும் எந்த மறுப்பும் சொல்லாமல் அட்வான்சை வாங்கி குவித்து வருகிறாராம். ஹன்சிகாவின் பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் நயன்தாராவின் பட வாய்ப்புகளும் நஸ்ரியாவை தேடி வருவதால், ஏக குஷியில் இருக்கிறார் நஸ்ரியா.

No comments:

Post a Comment