சிறிது நாட்களுக்கு முன்னர் வந்த கூகுள் கிளாஸ் பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதாங்க வெறும் கிளாஸ மட்டும் போட்டா படம் பாக்கலாம்ல அதாங்க கூகுள் கிளாஸ்.இப்போ அந்த கூகுள் கிளாஸ அமெரிக்காவை சேர்ந்த ஹாக்கர் ஒருத்தர் மாத்தி இருக்காரு பாஸ்.அதாவது அந்த கிளாஸ வெச்சு டிரான் எனப்படும் பறக்கும் தட்டை இயக்கி காண்பித்து இருக்கிறார் உண்மையிலேயே இதை பார்த்து ஆடிப் போய் இருப்பது கூகுள் தான்.
ஆமாங்க பின்ன அவங்க கிளாஸ்ல இப்படி ஒன்னு பண்ணலாம்ணு அவங்களுக்கே தெரியலையே, மேலும் இந்த கிளாஸ் குறித்து அவர் கூறும் போது தனது கண் இமைகளின் அசைவில் இருந்து தான் இதை இயக்குவதாக அவர் தெரிவிக்கிறார்.தனது இமை அசைவை அந்த பறக்கும் தட்டுக்குள் இருக்கும் சென்சார் உள்வாங்கி கொண்டு அதன் கட்டளைகளை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment