தணிக்கை குழு பிரச்னையை ஒருவாறு சமாளித்து தலைவா ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும்போது அடுத்த சிக்கல் ஒன்று டைரக்டர் ஏ.எல்.விஜயின் தம்பி உதயா மூலம் வந்திருக்கிறது. தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் உதயா, விஜய்க்கு முன்பே இவர்தான் சினிமாவுக்கு வந்தார். சில படங்களில் நடித்தும் முன்னுக்கு வரமுடியவில்லை. இளையமகன் ஏ.எல்.விஜய் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக சேர்ந்து எப்படி படம் எடுக்கலாம் என்பதை அவரிடம் கற்றுக் கொண்டு முன்னுக்கு வந்துவிட்டார்.
முன்னுக்கு வந்த தம்பி, பின்னுக்கு நிற்கிற அண்ணனை தேற்றிவிட தலைவா படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். இதற்கு வரும் சம்பளத்தில் தந்து விடுகிறேன் என்று அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவரிடம் 21 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதற்கு இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் உத்தரவாதம் அளித்துள்ளனர். இப்போது வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் படத்தை வெளியிடுவதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் முருகேசன் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இன்றும் தொடர்ந்து விசாரணை நடக்க உள்ளது. தலைவாவின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது 21 லட்சம் என்பது பாக்கெட் மணி மாதிரிதான். அதனால் பணத்தை செட்டில் செய்துவிட்டு வழக்கை வாபஸ் பெற வைத்து விடுவார்கள் என்கிறார்கள்.
No comments:
Post a Comment