Sunday, 4 August 2013

கெளதம் கார்த்திக் படத்திற்கு அரேபியன் ஸ்டைலில் பாடிய ஸ்ருதிஹாசன்



கடல் படத்திற்கு பிறகு கெளதம் கார்த்திக் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘‘அலா மொதலைன்தி’’ படத்தின் தமிழ் ரீமேக்தான் கெளதம் கார்த்திக் நடித்துவரும் புதிய படம். இன்னும்‌ பெயரிடப்படாத இப்படத்தை ப்ரியதர்ஷன் உதவியார் ரவி தியாகராஜன் டைரக்ட் செய்து வருகிறார். இதில் கெளதம் கார்த்திக்குடன் ராகுல் பிரீத்சிங், நிகிஷா படேல் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.காதலுக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த கதைக்கு டி.இமான் இசை அமைக்கிறார். இவர் இசையில் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்காக ஏற்கனவே ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பொழுது ‘ஷட் அப் யுவர் மவுத்’ என்ற பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். மிடில் ஈஸ்டர்ன் எனப்படும் அரேபியன் ஸ்டைல் பாடலை தான் முதன்முதலாக பாடியதாக ஸ்ருதி பெருமைப்படுகிறார் ஸ்ருதி. ஸ்ருதியுடன் தீபனும் சேர்ந்து பாடியுள்ளார். இப்படத்தை ரவிபிரசாத் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.ரவிக்குமார், பி.வி.பிரசாத் தயாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment