Sunday, 4 August 2013

அஜீத் சினிமா வாழ்க்கைக்கு வயது 21... வாழ்த்தும் திரையுலகம்!

அஜீத்தின் சினிமா வாழ்க்கைக்கு இன்று 21 வயதாகிறது. இந்த நாளில் அவரை சினிமா உலகப் பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் அஜீத்.
அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்தாலும், சோர்ந்து விடாமல் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார். 




1993 -ல் அமராவதியில் இயக்குநர் செல்வாவால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார் அஜீத். இந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. தொடர்ந்து பவித்ரா போன்ற படங்களில் நடித்தார். வான்மதி என்ற படம் அவரை ஓரளவு பிரபலமாக்கியது.ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிட்டிசன், வில்லன், வரலாறு என பல ஹிட் படங்கள் அவருக்கு அமைந்தன.
அவர் நடிப்பில் வந்த பெரிய வெற்றிப் படம் மங்காத்தா. இது அவரது 50வது படம். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விநாயகம் பிரதர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டோடு அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாளில் அவருக்கு ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
 

No comments:

Post a Comment