பிரபல இந்தி டி.வி. தொடர்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி பரிக் இன்று மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் காரை ஓட்டிச் சென்றார்.
அதிக வேகத்தில் சென்ற அவரது கார், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் பகவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சாக்ஷி பரிக்கை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த போது அவர் குடிபோதையில் இருந்தாரா ? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment