Sunday, 6 October 2013

கம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு KEY'S FEATURES OF F1- F12

கம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5.

இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும்.

மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.

 ஒவ்வொரு விசையும் எதற்கு எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். எதையும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிவிடும்.

பிறகு உங்களுக்கும் விரைவாக பிரௌசிங் செய்வது, விரைவாக கணினியைக் கையாள்வது எளிமையாகிவிடும்.

F1 விசை பயன்பாடு:

அனைத்து புரோகிராம்களிலும் இது உதவிகுறிப்பு பக்கத்தைத் திறக்கப் பயன்படுகிறது. அதாவது நீங்கள் எந்த புரோகிராமை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களோ அந்த புரோகிராம் பற்றிய உதவிக்குறிப்புகளைப் பெறலாம். (உதாரணமாக போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, அதைப்பற்றி உதவிக்குறிப்புகளைப் பெற F1 விசையை அழுத்திப் பெறலாம். போட்டோஷாப் மட்டும் அல்ல.. கணினியில் உள்ள அனைத்து புரோகிராம்களுக்கும் உதவிக்குறிப்புகளைப் பெற இந்த F1 விசைப் பயன்படுகிறது.)
CMOS செட்டப்பில் பயன்படுகிறது.


F2 விசை பயன்பாடு:

ஒரு கோப்பு அல்லது ஒரு கோப்புறைக்கு "மாற்றுப்பெயர்" (Rename) கொடுக்கப் பயன்படுகிறது. Boot menu செல்ல பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் வேர்டில்..
புதிய டாகுமெண்ட் ஒன்றை திறக்கப் (Alt+Ctrl+F2)பயன்படுகிறது
Print Preview பார்க்க (Ctrl+F2) பயன்படுகிறது.

F3 விசை பயன்பாடு:

பெரும்பாலான புரோகிராமில் தேடுதல் வசதியை (Search) கொண்டு வர பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையை பெரிய எழுத்திலிருந்து சிறிய எழுத்தாக (Upper case to Lower case) மாற்ற பயன்படுகிறது.
MS-DOS லும் இறுதிய வரியை ரிப்பீட் (Repeat)செய்ய பயன்படுகிறது.

F4 விசையின் பயன்பாடு:

புரோகிராமில் உள்ளதை Find செய்யப் பயன்படும் திரையை கொண்டுவர பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் எம்எஸ் வேர்ட் டாகுமெண்டில் முந்தைய வரி ஒன்றை பேஸ்ட் செய்ய பயன்படுகிறது.
ஒரு புரோகிராமை மூட பயன்படுகிறது. (Alt+F4)
தற்பொழுது காட்சித்திரையில் தோற்றமளிக்கும் புரோகிராமை (Current Window) மூட (Ctrl+F4)பயன்படுகிறது.

F5 விசையின் பயன்பாடு:

கணினியை அல்லது இணையப்பக்கத்தை மீள்தொடக்கம் (Reload அல்லது Refresh)செய்ய பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் வேர்டில் Find and Replace விண்டோவைத் திறக்கப் பயன்படுகிறது.
பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேசனை இயக்கப் பயன்படுகிறது.

F6 விசையின் பயன்பாடு:

கூகிள் குரோம்,இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் போன்ற உலவிகளில் கர்சரை அட்ரஸ்பாருக்கு கொண்டுசெல்ல பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாகுமெண்ட்டைத் திறக்க பயன்படுகிறது. (Ctrl+Shift+F6)

F7 விசையின் பயன்பாடு:

மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்டில் Spelling check மற்றும் Grammer Check செய்யப் பயன்படுகிறது.
மொசில்லா பயர்பாக்சில் Caret Brwosing பயன்பாட்டைத் திறக்கப் பயன்படுகிறது.

F8 விசை பயன்பாடு:

விண்டோஸ் கணினி தொடக்கம் செய்யும்போது Safe Mode ல் திறக்கப் பயன்படுகிறது.

F9 விசை பயன்பாடு:

Quark 5.0 வில் மெசர்மெண்ட் டூல்பார் திறக்கப் பயன்படுகிறது.
F10 விசையின் பயன்பாடு:

மைக்ரோசாப்ட் வேர்டில் "MenuBar" திறக்கப் பயன்படுகிறது.
மௌசில் ரைட் கிளிக் பயன்பாட்டைக் கொண்டுவர பயன்படுகிறது (Shift+F10)

F11 விசையின் பயன்பாடு:
கணனியில் முழுதிரையை (Full Screen)கொண்டுவர பயன்படுகிறது.

F12 விசையின் பயன்பாடு:

மைக்ரோசாப்ட் வேர்டில் Save As Menu கொண்டுவர பயன்படுகிறது.
மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட்டை சேமிக்க பயன்படுகிறது (Shift+F12)
மைக்ரோசாப்ட் வேர்ட் டாகுமெண்ட்டை பிரிண்ட் செய்ய பயன்படுகிறது. (Ctrl+Shift+F12)

No comments:

Post a Comment